A Short History of Nearly Everything ( Tamil)

A Short History of Nearly Everything ( Tamil)

Author : Bill Bryson (Author) PSV Kumarasamy (Translator)

In stock
Rs. 699.00
Classification Papular Science
Pub Date December 2022
Imprint Manjul Publishing House
Page Extent 490
Binding Paperback
Language Tamil
ISBN 9789355430564
In stock
Rs. 699.00
(inclusive all taxes)
OR
About the Book

21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் நூல்!
பில் பிரைசன் தன்னைத் தயக்கத்துடன்கூடிய ஓர் ஊர்சுற்றி என்று கூறிக் கொள்கிறார். ஆனால் அவர் தன் வீட்டில் அடைந்து கிடக்கும்போதுகூட, தன்னைச் சுற்றி இருக்கின்ற உலகைக் குறித்த ஆர்வக் குறுகுறுப்பை அவரால் கட்டுப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. பிரபஞ்சப் பெருவெடிப்பிலிருந்து மனித நாகரிகத்தின் எழுச்சிவரை என்னவெல்லாம் நடந்துள்ளது என்பதைப் பற்றிய அவருடைய பிரம்மாண்டமான தேடலிலிருந்து உதயமானதுதான் இந்நூல்.
பெயரைச் சொன்னாலே நமக்கு அலுப்பையும் ஆயாசத்தையும் ஏற்படுத்துகின்ற அணுத்துகள் இயற்பியல், உயிர்வேதியியல், கனிமவியல் போன்ற அறிவியல் பிரிவுகள் சார்ந்த கடினமான விஷயங்களை எடுத்துக் கொண்டு, அறிவியல் ஒருபோதும் சுவாரசியமாக இருக்காது என்று உறுதியாக நம்புகின்ற அன்பர்களுக்கும் சுவாரசியமூட்டுகின்ற விதத்தில் அவற்றை எப்படிக் கொடுப்பது என்ற சவாலை பில் பிரைசன் இந்நூலில் சமாளித்துள்ள விதத்தைக் கண்டு நீங்கள் மலைத்துப் போவீர்கள்.
அடடா, இந்நூலை மட்டும் நான் இளமையிலேயே படித்திருந்தால், கண்டிப்பாக ஓர் அறிவியலறிஞராக ஆகியிருந்திருப்பேன் என்ற எண்ணம் வாசகர்களில் பலருக்கும் ஏற்படும் என்பது உறுதி. அதுவே, எதைப் படிப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் கட்டத்தில் நீங்கள் இருந்தால், நீங்கள் கண்டிப்பாக அறிவியலில் மூழ்கி முத்தெடுக்க முனைவீர்கள் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

About the Author(s)

வீர்கள் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
About the author:
புனைகதை அல்லாத நூல்களை அபாரமான நகைச்சுவையுடனும் நையாண்டியுடனும் எளிதில் புரிகின்ற விதத்திலும் எழுதுபவர்களில் பில் பிரைசன் முன்னணி வகிக்கிறார். பயணக் கட்டுரைகள், வரலாறு, மொழி மற்றும் அறிவியல் குறித்தப் பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய நூல்களில் மிகவும் கொண்டாடப்பட்ட இந்நூலுக்கு, அறிவியல் நூல்களுக்கு வழங்கப்படுகின்ற, லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் கௌரவமிக்க ‘அவென்டிஸ்’ பரிசு வழங்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரபலமான தெக்கார்த்தே பரிசும் அப்புத்தகத்திற்குக் கிடைத்தது. பிரிட்டனிலுள்ள பழமையான பத்துப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான டர்ஹம் பல்கலைகழகத்தின் வேந்தராக பிரைசன் 2005 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டுவரை பணியாற்றினார். அவர் ராயல் சொசைட்டியின் ஒரு கௌரவ உறுப்பினராக ஆக்கப்பட்டார். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் பத்துக்கும் மேற்பட்டவை அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளன. பில் பிரைசன் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

[profiler]
Memory usage: real: 20971520, emalloc: 18466472
Code ProfilerTimeCntEmallocRealMem