Most And More ( Tamil)

Most And More ( Tamil)

Author : Mahatria Ra (Author) Nagalakshmi Shanmugam (Translator)

In stock
Rs. 399.00
Classification Self-Help
Pub Date 2013
Imprint Manjul Publishing House
Page Extent 304
Binding Paperback
Language Tamil
ISBN 9788183222945
In stock
Rs. 399.00
(inclusive all taxes)
OR
About the Book

‘தெரிந்த ரகசியங்கள்’ நூலைப் படிப்பது, நம்பிக்கை, அபரிமிதம் மற்றும் சாத்தியக்கூறுகள் தொடர்பான புதிய பல பாதைகளைத் திறந்துவிடும். இந்நூலின் ஆசிரியரான மஹாத்ரயா, தன்னுடைய வாசகர்களுடனான வாழ்நாட்கால ஆய்விலிருந்து கிடைத்த ஞானத்தை, ஒரு கதையின் வடிவில் இதில் பகிர்ந்து கொள்கிறார். எளிதில் நடைமுறைப்படுத்தத்தக்க வாழ்க்கை உத்திகள் ஊடாக அவர் வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கான பாதைக்கு நமக்கு வழி காட்டுகிறார். அதோடு, நம்முடைய வாழ்க்கையில் இடம் பெற்றுள்ள சிறிய மற்றும் பெரிய விஷயங்களின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளவும் நமக்கு உதவுகிறார். வாழ்க்கையின் முப்பரிமாணங்களாக விளங்குகின்ற தனிப்பட்ட ரீதியிலும், தொழில்முறைரீதியிலும் உளரீதியிலும் வளர விரும்புகின்ற எவரொருவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.
அதனுடைய எளிய நடைக்காகவும், நம்மோடு பொருத்திப் பார்த்துக் கொள்ள வசதியாக இருக்கின்ற எடுத்துக்காட்டுகளுக்காகவும் இந்நூல் பெருநிறுவன உலகத் தலைவர்களின் எண்ணற்ற பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. தனிநபர் வளர்ச்சிக்கும்,ஒரு நிறுவனத்தில் தலைமைத்துவ வளர்ச்சிக்கும் வழிகாட்டுகின்ற ஒரு கச்சிதமான பரிசுதான் ‘தெரிந்த ரகசியங்கள்’.
தன்னையும் அதன் மூலம் இந்த உலகையும் தூக்கி நிறுத்தப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்நூல் காணிக்கையாக்கப்படுகிறது.
எல்லோரும் நடக்கின்ற பாதையில்
நீங்கள் நடந்தால் எல்லோரும்
அடைகின்ற இடத்தைத்தான் அடைவீர்கள்.
வேறு எவரும் அடைந்திராத இடத்தை
நீங்கள் அடைய வேண்டுமென்றால்
வேறு எவரும் செய்திராத காரியங்களைச்
செய்திடத் துணிய வேண்டும்.

வெற்றி கிட்ட வேண்டுமென்றால்
வித்தியாசமாக இருக்க வேண்டும்.
வித்தியாசமானவர்கள்தான்
புதிய பாதைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
அபரிமிதம் உங்களது பிறப்புரிமை.
அதைப் பெற நீங்கள் தகுதியானவர்தாம்.
அதற்கு ஒரு வழி இருக்கிறது.
மஹாத்ரயா


’தெரிந்த ரகசியங்கள்’ என்ற நூலைப் படிப்பதன் மூலம் நீங்கள் உங்கள் வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியங்களையும் உங்களை நோக்கிக் கவர்ந்திழுப்பீர்கள்!

About the Author(s)

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகெங்குமுள்ள இலட்சக்கணக்கானோர், பூரண அபரிமிதத்தோடுகூடிய வாழ்க்கையை வாழ அருளியுள்ளார். மஹாத்ரயாவையும் அவருடைய ஞானத்தையும் அனுபவிப்பது என்பது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒன்றாகும். அது மக்கள், ஆரோக்கியம், செல்வம், அன்பு, பேரானந்தம், ஆன்மிகப் பிணைப்பு ஆகியவை தொடர்பாகத் தங்களிடம் படிந்து போயுள்ள நம்பிக்கை அமைப்பு முறைகளை மீறி வர அவர்களுக்கு உதவுகிறது.
தொழிலதிபர்களிடமிருந்து, ஃபோர்ப்ஸ் பத்திரிகை தொகுத்து வழங்குகின்ற செல்வந்தர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்ற தொழில்முனைவோர்கள், மக்களுடைய அபிப்பிராயங்களில் தாக்கம் ஏற்படுத்துகின்றவர்கள், விருதுபெற்ற இசைக் கலைஞர்கள், பிரபலமான விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள்வரை எண்ணற்றோர் மேம்பட வழிகாட்டியுள்ளார்.
அனுபவபூர்வமானதாகவும், சமகாலத்தியமானதாகவும், நகைச்சுவை தூவப்பட்ட ஒன்றாகவும் விளங்குகின்ற அவருடைய கற்பிக்கும் முறை, ஒருவருடைய வயது, சமூ அந்தஸ்து, புவியியல் எல்லைகளை அனைத்தையும் தாண்டி அனைவருக்கும் உத்வேகம் ஊட்டுகின்ற ஒன்றாகும். மனத்திற்கும் இதயத்திற்கும் அறைகூவல் விடுத்து, வாழ்க்கையின் முரண்பாடுகள் மற்றும் மர்மங்களுக்குப் பின்னாலுள்ள ‘ஏன்’ என்பதற்கு விளக்கமளித்து, ஓர் உணர்வுபூர்வமான தொடர்பை ஏற்படுத்தி, ‘வாழ்க்கை அழகானது’ என்பதை நூற்றுக்கணக்கான நிறுவனங்களும் இலட்சக்கணக்கான தனிநபர்களும் அனுபவரீதியாக உணர அவர் உதவியுள்ளார்.
மஹாத்ரயா வாழ்க்கையையும் தன்னையும் எப்போதும் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். அவர் பாதையை முறிப்பவராக இருப்பதாலேயே புதிய பாதையைக் கண்டுபிடிப்பவராகவும் விளங்குகிறார். அவர் ஒரு சகாப்தம் . . . .

[profiler]
Memory usage: real: 20971520, emalloc: 18516664
Code ProfilerTimeCntEmallocRealMem