Essentialism: The Disciplined Pursuit of Less (Tamil)

Essentialism: The Disciplined Pursuit of Less (Tamil)

Author : Greg Mckeown (Author) PSV Kumarasamy (Translator)

In stock
Rs. 399.00
Classification Business/Analysis & Strategy
Pub Date 25 September 2023
Imprint Manjul Publishing House
Page Extent 274
Binding Paperback
Language Tamil
ISBN 9789355433343
In stock
Rs. 399.00
(inclusive all taxes)
OR
About the Book

அத்தியாவசியவாதம் என்பது வெறுமனே ஒரு நேர நிர்வாக உத்தியோ அல்லது மேம்பட்ட உற்பத்தித்திறனுக்கான உத்தியோ மட்டுமல்ல. அது இவற்றைக் கடந்த ஒன்று. நம் வாழ்வில் மிகவும் அத்தியாவசியமானவை எவை என்பதைக் கண்டறிந்து, மற்ற அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அந்த அத்தியாவசியமான விஷயங்களை மட்டும் ஓர் ஒழுங்குடன் மேற்கொள்வதுதான் அத்தியாவசியவாதமாகும்.
• வீட்டில் அல்லது அலுவலகத்தில், ‘இதற்கு மேல் என்னால் முடியாது’ என்ற நிலையை நீங்கள் எப்போதாவது அடைந்ததுண்டா?
• அதிகமாக வேலை செய்தும் குறைவானவற்றையே சாதித்துள்ளதுபோல நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா?
• படுசுறுசுறுப்பாக இருந்திருந்தும் ஆக்கபூர்வமாக எதையும் செய்திருக்கவில்லை என்ற உணர்வு உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டதுண்டா?
• எப்போதும் இயங்கிக் கொண்டே இருந்து வந்துள்ளபோதிலும் எங்கும் போய்ச் சேர்ந்திருக்காததைப்போல நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா?
இக்கேள்விகளில் எவற்றுக்கேனும் ‘ஆமாம்’ என்று நீங்கள் பதிலளித்திருந்தால், நீங்கள் ஓர் அத்தியாவசியவாதியாக மாறுவதே உங்களுக்கான ஒரே தீர்வு.

About the Author(s)

கிரெக் மெக்யூன் ஒரு பிரபல பேச்சாளர், நூலாசிரியர் மற்றும் வலையொலிப்பதிவாளர். நியூயார்க் டைம்ஸ், ஃபாஸ்ட் கம்பெனி, ஃபார்ச்சூன், ஹஃப்போஸ்ட், பொலிட்டிகோ, இங்க் போன்ற பத்திரிகைகளில் அவரைப் பற்றிய கட்டுரைகளும் அவருடைய பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன. அவர் ‘லிங்க்ட்இன்’ தளத்தின் மிகப் பிரபலமான வலைப்பதிவாளராகத் திகழ்கிறார். என்பிஆர், என்பிசி, ஃபாக்ஸ் ஆகிய சேனல்களிலும், ‘ஸ்டீவ் ஹார்வி ஷோ’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பேட்டி காணப்பட்டுள்ளார். உலகப் பொருளாதார மன்றத்தால் ‘இளம் சர்வதேசத் தலைவராக’ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலண்டனில் பிறந்து வளர்ந்த அவர், தற்போது கலிபோர்னியாவில் தன் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

[profiler]
Memory usage: real: 20971520, emalloc: 18451144
Code ProfilerTimeCntEmallocRealMem