How To Talk To Anyone: 92 Little Tricks For Big Success In Relationship

How To Talk To Anyone: 92 Little Tricks For Big Success In Relationship

Author : Leil Lowndes (Author) PSV Kumarasamy (Translator)

In stock
Rs. 499.00
Classification Self Help
Pub Date May 2023
Imprint Manjul Publishing House
Page Extent 450
Binding Paperback
Language Tamil
ISBN 9789355432193
In stock
Rs. 499.00
(inclusive all taxes)
OR
About the Book

வாழ்க்கையில் எல்லாவற்றையும் கைவசப்படுத்தியுள்ள வெற்றியாளர்களைக் கண்டு, அது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது என்று நீங்கள் வியந்ததுண்டா? வணிகக் கூட்டங்களாகட்டும், சிறு சந்திப்புக்கூட்டங்களாகட்டும், அங்கு அவர்கள் அனைவருடனும் தன்னம்பிக்கையுடன் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போன்ற நபர்கள்தாம் நல்ல வேலைகளையும், சிறப்பான வாழ்க்கைத் துணைவர்களையும், சுவாரசியமான நண்பர்களையும் பெற்றிருக்கின்றனர். அவர்கள் உங்களைவிட அதிக சாமர்த்தியமானவர்களாகவோ அல்லது அதிக வசீகரமானவர்களாகவோ இருப்பதால் அவர்கள் வெற்றியாளர்களாக இருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. பிறருடன் கலந்துரையாடுவதற்கும், அவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்குமான அதிக ஆற்றல்மிக்க ஒரு வழியை அவர்கள் அறிந்துள்ளனர், அவ்வளவுதான்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள உத்திகளில் இவையும் அடங்கும்:
• எடுத்த எடுப்பிலேயே உங்களைப் பற்றிய ஒரு சிறந்த அபிப்பிராயத்தைப் பிறரிடம் தோற்றுவிப்பது எப்படி?
• எந்தவொரு கூட்டத்திலும், அக்கூட்டம் தொடர்பான விஷய ஞானம் உங்களிடம் இருப்பதாகக் காட்டிக் கொள்வது எப்படி?
• உரையாடல்களின்போது எப்போது பிறருடைய அகங்காரத்திற்குத் தீனி போட வேண்டும், எப்போது போடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது எப்படி?
• உங்களுடைய அலைபேசியை ஒரு சிறந்த கருத்துப் பரிமாற்றக் கருவியாகப் பயன்படுத்துவது எப்படி?
• உங்கள் முன் இருப்பவர்களை, கைதேர்ந்த ஓர் அரசியல்வாதியைப்போல உங்களுடைய பேச்சால் கட்டிப்போடுவது எப்படி?

About the Author(s)

லீல் லவுன்டெஸ் சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படுகின்ற கருத்துப் பரிமாற்ற வல்லுநர். கருத்துப் பரிமாற்றத் திறமையை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை, ‘பார்ச்சூன் 500’ நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளிலிருந்து, களத்தில் இறங்கி வேலை செய்கின்ற ஊழியர்கள்வரை அனைவருக்கும் அவர் கற்றுக் கொடுக்கிறார். அமெரிக்காவிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் அவர் சொற்பொழிவாற்றியுள்ளார். அமெரிக்க பீஸ் கார்ப்ஸ், வெளிநாட்டு அரசாங்கங்கள், பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் போன்றவற்றுக்கு அவர் கருத்தரங்குகள் நடத்தியுள்ளார். நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ள அவரை, நியூயார்க் டைம்ஸ், சிகாகோ டிரிபியூன், டைம் போன்ற பத்திரிகைகள் பெரிதும் பாராட்டியுள்ளன. அவருடைய கட்டுரைகள் எண்ணற்றப் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் வெளியாகியுள்ளன. விற்பனையில் சக்கைப்போடு போட்டுள்ள பல நூல்களை அவர் எழுதியுள்ளார். இப்போது அவர் நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

[profiler]
Memory usage: real: 20971520, emalloc: 18467640
Code ProfilerTimeCntEmallocRealMem