OUT OF THE MAZE

OUT OF THE MAZE

Author : Spencer Johnson

In stock
Rs. 175.00
Classification Self-Help
Pub Date May 2019
Imprint Manjul Publishing House
Page Extent 104
Binding Paperback
Language Tamil
ISBN 9789388241823
In stock
Rs. 175.00
(inclusive all taxes)
OR
About the Book

எல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூல் வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக இப்போது இந்நூல் வெளிவந்துள்ளது.
‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூலின் கதை எங்கே முடிந்ததோ, அந்த இடத்திலிருந்து தொடங்குகின்ற ‘புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்’ என்ற இந்நூல், உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுவது என்பது பற்றிய ஆழமான உண்மைகளை வழங்குகின்ற ஓர் எளிய கதையாகும்.
சுண்டெலி அளவில் இருந்த ஹெம், ஹா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூலில் நாம் முதன்முதலாக சந்தித்தபோது, அவர்கள் பெரிதும் விரும்பி உட்கொண்ட சீஸ் திடீரென்று மாயமாய் மறைந்ததன் காரணமாக எதிர்பாராத மாற்றத்தை அவ்விருவரும் எதிர்கொண்டதை நாம் பார்த்தோம். புதிய சீஸைத் தேடிச் சென்றதன் மூலம், அந்த மாற்றத்தை எப்படி வெற்றிகரமாகக் கையாளுவது என்பதை ஹா கற்றுக் கொண்டான். ஆனால், ஹெம் தான் இருந்த இடத்திலேயே தொடர்ந்து சிக்கிக் கிடந்தான்.
ஹெம் அடுத்து என்ன செய்தான் என்பதையும், அவன் கண்டுபிடித்த விஷயங்கள் எப்படி உங்கள் சொந்த வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய புதிர்ப்பாதைகளில் எதிர்ப்படும் புதிர்களுக்குத் தீர்வு காணுவதற்கு உங்களுக்கு உதவும் என்பதையும் இப்போது ‘புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்’ என்ற இந்நூல் வெளிப்படுத்துகிறது
‘சீஸ்’ என்பது உங்களுக்கு ஊட்டமளிக்கக்கூடிய ஏதோ ஒன்றுக்கான ஓர் உருவகம்தான். அந்த ஏதோ ஒன்று நல்லதொரு வேலையாக இருக்கலாம், அல்லது அன்பான ஓர் உறவு, பணம், உடமைகள், சிறந்த ஆரோக்கியம், அல்லது மன அமைதியாக இருக்கலாம்.
‘புதிர்ப்பாதை’ என்பது நீங்கள் உங்கள் சீஸைக் கண்டுபிடித்து அதை மகிழ்ச்சியாக அனுபவிப்பதிலிருந்து உங்களைத் தடுத்துக் கொண்டிருக்கின்ற ஏதேனும் சவால் அல்லது கடினமான சூழ்நிலைக்கான ஓர் உருவகமாகும்.
ஹெம்மும் அவனுடைய புதிய தோழியான ஹோப்பும் மேற்கொண்டுள்ள புதிய பயணத்தில் நீங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தால், பாரம்பரியச் சிந்தனைக்கு அப்பாற்பட்டுச் சிந்திப்பதன் மூலம் வாழ்க்கையிலிருந்து அதிகமானவற்றை எப்படிப் பெறுவது என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். இந்நூலில் இடம்பெற்றுள்ள ஆழமான உள்நோக்குகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு தொடர்ந்து நீடிக்கும்.

About the Author(s)

டாக்டர் ஸ்பென்சர் ஜான்சன், சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படுகின்ற சிந்தனையாளர் மற்றும் நூலாசிரியர். உலகெங்கும் விற்பனையில் சாதனைகளைக் குவித்துக் கொண்டிருக்கும் அவருடைய பத்துப் புத்தகங்களில், ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூலும் ஒன்று.
நியூயார்க் டைம்ஸ் விற்பனைப் பட்டியலில் முதலாம் இடத்தை வகித்த ‘ஒரு நிமிட மேலாளர்’ என்ற புத்தகத்தை, பிரபல நிர்வாக ஆலோசனையாளரான கென் பிளான்சார்டுடன் இணைந்து அவர் எழுதினார். அப்புத்தகம் இன்றும் வியாபாரம் தொடர்பான புத்தக விற்பனைப் பட்டியலில் இடம்பெற்று வருகின்றது. அதோடு, உலகிலேயே மிகவும் பிரபலமான நிர்வாக வழிமுறையாக அது விளங்கி வருகிறது.
ஸ்பென்சர் ஜான்சன் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து உளவியலில் பி.ஏ. பட்டம் பெற்றார், ‘ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்’ கல்லூரியிலிருந்து எம்.டி. பட்டம் பெற்றார். பின்னர் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரி மற்றும் மேயோ மருத்துவ மையத்தில் அவர் மருத்துவப் பயிற்சி பெற்றார்.
42 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்ற அவருடைய புத்தகங்களை உலகெங்கிலும் நான்கு கோடி மக்கள் படித்துள்ளனர். அவர் 2017ம் ஆண்டில் காலமானார்.

[profiler]
Memory usage: real: 20971520, emalloc: 18482584
Code ProfilerTimeCntEmallocRealMem