About the Book
மிகச் சிறப்பான பலன்களை அளிக்கக்கூடிய திறன்களில் தலையாயது மக்களைக் கையாளும் திறன்தான். அது உங்களிடம் இருக்கிறதா?
நீங்கள் உங்கள் தொழில்வாழ்க்கையில் மகத்தான வெற்றி பெறவும், சமூகத் தொடர்புகளில் சிறப்பாகச் செயல்படவும், குடும்ப உறவுகளில் மேம்பாடு அடையவும் தேவையான எளிய உத்திகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.
இப்புத்தகம் இவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்:
• மக்களுடன் இலகுவாக ஒத்துப் போவது எப்படி
• மக்களிடம் செல்வாக்குடன் திகழ்வது எப்படி
• மக்களை நேர்மையாகப் பாராட்டுவது எப்படி
• மக்களுடைய மனம் நோகாமல் அவர்களை விமர்சிப்பது எப்படி
இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இருபது லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ள இப்புத்தகம் இப்போது உங்களுடன் தமிழில் பேச வந்துள்ளது.
About the Author(s)
நூலாசிரியரை லெஸ் கிப்லினைப் பற்றி
தனிநபர் வளர்ச்சித் துறையின் முன்னோடிகளில் ஒருவரான லெஸ் கில்பின் 1912ல் பிறந்தவர். ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, வீடுவீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்யும் ஒரு விற்பனையாளராக அவர் தன் தொழில்வாழ்க்கையைத் துவக்கி அதில் வெற்றிகரமாகச் செயல்பட்டார். மனித இயல்பைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றி முழுமையாகக் கற்றுக் கொள்ள இத்தொழில் அவருக்கு உதவியது. இதன் விளைவாக, அமெரிக்காவின் தலைசிறந்த விற்பனையாளர் பட்டத்தை இரண்டு முறை அவர் வென்றார். மக்களைக் கையாளும் கலையைப் பற்றியும் விற்பனைத் தொழிலில் சிறப்புறுவது எப்படி என்பது பற்றியும் அவர் பல பயிலரங்குகளை நடத்தியுள்ளார். அவர் ஒரு வெற்றிகரமான நூலாசிரியராகத் திகழ்ந்தார். அவருடைய புத்தகங்கள் பத்து லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன. மக்களைக் கையாளும் கலைதான் உங்கள் வாழ்வில் நீங்கள் கைவசப்படுத்த வேண்டிய இன்றியமையாத திறன் என்ற அவருடைய செய்தி, நேரடியாக அன்றி கருவிகள் வாயிலாகக் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழுகின்ற இன்றைய காலகட்டத்தில் ஒரு புதிய அர்த்தத்தைப் பெறுகிறது.