The Magic ( Tamil)

The Magic ( Tamil)

Author : Rhonda Byrne (Author) Nagalakshmi Shanmugam (Translator)

In stock
Rs. 499.00
Classification Self Help
Pub Date 2013
Imprint Manjul Publishing House
Page Extent 320
Binding Paperback
Language Tamil
ISBN 9788183223232
In stock
Rs. 499.00
(inclusive all taxes)
OR
About the Book

கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு புனித நூலில் புதைந்து கிடந்த வார்த்தைகள், அதைப் படித்தப் பெரும்பாலானோருக்குத் திகைப்பூட்டுவதாகவும், குழப்பமூட்டுவதாகவும், முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒன்றாகவும் விளங்கி வந்துள்ளது. அந்த வார்த்தைகள் உண்மையில் ஒரு புதிர் என்பதையும், நீங்கள் அப்புதிரை விடுவிக்கும்பட்சத்தில் ஒரு புதிய உலகம் உங்கள் கண்முன்னே விரியும் என்பதையும் வரலாற்றில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே அறிந்து வைத்திருந்தனர்.
‘மாயாஜாலம்’ என்னும் இப்புத்தகத்தில், ரோன்டா பைர்ன், வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடிய இந்த ஞானத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறார். இந்த ஞானத்தை நீங்கள் உங்களுடைய தினசரி வாழ்வில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதை நம்புதற்கரிய 28 நாள் பயணத்தின் ஊடாக அவர் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்.
நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நீங்கள் எங்கிருந்தாலும் சரி, உங்களுடைய தற்போதைய வாழ்வுச் சூழல் எப்படியிருந்தாலும் சரி, இந்த ‘மாயாஜாலம்’ உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்வையும் மாற்றப் போகிறது. மாயாஜாலம் குறித்து மேலும் தகவல் அறிய www.thesecret.tv இணையத்தளத்திற்கு வருகை தாருங்கள்.

About the Author(s)

2006ல் வெளியிடப்பட்டு உலகெங்கிலும் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்ட, அவர்களுடைய வாழ்வில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்திய ‘இரகசியம்’ திரைப்படத்துடன் ரோன்டா பைர்னின் பயணம் தொடங்கியது. அதே ஆண்டின் பிற்பகுதியில் ‘இரகசியம்’ புத்தகத்தையும் அவர் எழுதினார். ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்நூல், மிக அதிகமாக விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் மிக நீண்டகாலமாகத் தொடர்ந்து இடம்பெற்றுச் சாதனை படைத்துள்ளது. 2010ல் வெளிவந்த ‘சக்தி’, 2013ல் வெளிவந்த ‘கதாநாயகன்’ ஆகிய நூல்களும் ரோன்டாவின் பிற வெற்றிப் படைப்புகளாகும்.

[profiler]
Memory usage: real: 20971520, emalloc: 18456768
Code ProfilerTimeCntEmallocRealMem